அரிசி, பால், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பாயசம் ஆகும். இது வழக்கமாக விருந்துகளிலும், சிறப்பு கொண்டாட்டங்களின் போதும் பரிமாறப்படும்.
பால் பாயசம் பார்ப்பதற்கு நன்றாக மணமுடையதாகவும் மிகுந்த சுவையுள்ளதாகவும் இருக்கும்!
தேவையான பொருட்கள்
- உமி நீக்கப்பட்ட அரிசி - ¼ கப்
- பால் - 1½ லிட்டர்
- சர்க்கரை - ¾ கிலோ
அழகுப்படுத்துவதற்காக
- முந்திரி பருப்பு - ¼ கப்
- உலர்ந்த திராட்சை - ¼ கப்
- ஏலம் – 4
- நெய் (பொரிப்பதற்காக)
மிகவும் சுவையான இந்த உணவு, தயாரிப்பதற்கு மிகவும் எளிது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தேவையான பொருட்களை எல்லாம் ஒரு பிரஷர் குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை அதிக எரிதழலில் சமைக்க வேண்டும்.
இப்போது அடுப்பை குறைத்து ½ மணி நேரம் வேக வைக்க வேண்டும். பின்னர் பொடித்து வைத்தவற்றை சேர்க்க வேண்டும்.
அவ்வளவுதான்! நீங்கள் அடுப்பை அணைத்து விட்டு அப்படியே பரிமாறலாம்.
0 கருத்துகள்:
Post a Comment