RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

கொழுக்கட்டை - கார வகை

தேவையான பொருள்கள் : 
  1. பச்சரிசி மாவு – 1 கப்
  2. தண்ணீர் – 2 கப்
  3. பச்சை மிளகாய் – 3
  4. பெருங்காயம் – 1 சிட்டிகை
  5. உப்பு – தேவையான அளவு (சுமார் 1 டீஸ்பூன்)
  6.  தேங்காய்த் துருவல் – 1 டேபிள்டீஸ்பூன் (விரும்பினால்)
  7. தேங்காயெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூ


செய்முறை :

தாளிக்க: தேங்காயெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.
  
  1. பச்சை மிளகாய், உப்பு பெருங்காயத்தை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். 
  2. ஒரு கப் பச்சரிசி மாவை இரண்டு கப் தண்ணீரில் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். 
  3. கரைசலுடன் 2 டேபிள்ஸ்பூன் தேங்காயெண்ணெய் விட்டு அடுப்பில் வாணலியில் அடிப்பிடிக்காமல் கைவிடாமல் கிளறவும். (நான்ஸ்டிக் வாணலியில் எளிதாகவும் விரைவாகவும் செய்யலாம்.) 
  4. மாவு இறுக ஆரம்பிக்கும்போது அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். சுமார் 10 நிமிடத்துக்குள் மாவு வெந்து இறுகி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். 
  5. ஆறிய மாவை சுண்டைக்காய் அளவு சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். 
  6. ஒரு குக்கர் பாத்திரம் அல்லது இட்லிதட்டில் எண்ணெய் தடவி, உருண்டைகளை வைத்து குக்கரில் இட்லிவேக வைப்பதுபோல் வெயிட் போடாமல் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் வேகவைத்து எடுக்கவும். 
  7. அடுப்பை அணைத்த உடனே திறந்து மின்விசிறி அடியில் ஆறவிடவும். 
  8. அடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் தாளித்து, மெதுவாக உருண்டைகளைச் சேர்த்து உடையாமல் நாசுக்காகக் கிளறிவிடவும். 
  9. கொழுக்கட்டைகளைச் சேர்த்தபின் ஒரு நிமிடம் மட்டும் அடுப்பில் வைத்திருந்து கிளறி இறக்கிவிடவும்
 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

Post a Comment

தமிழ் உலகம் Headline

விருந்தினர் இணைப்புநிலை :
Your Ad Here
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான சமர்பிப்புகள்.

பின்பற்றுவோர்

◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►