தேவையான பொருட்கள்
தாளிக்க
செய்முறை :
சிக்கன் வேகும் போது நீர் விடும் , அதனால் அரிசிக்கு தண்ணீர் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
அரிசி போட்டு வேக வைக்கும் போது ஒரு விசிலுக்கு மேல் விடக்கூடாது அதே போல் நெருப்பும் குறைந்த அளவில் இருக்க வேண்டும் , இல்லா விட்டால் சாதம் குழைந்து விடும்.
- சிக்கன் - 1/2 கிலோ
- பாஸ்மதி அரிசி - 4 கப்
- வெங்காயம் - 2 பெரியது
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 6
- புதினா - 1 கட்டு
- கொத்தமல்லி - 1 கட்டு
- மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
- பிரியாணி மசாலா பொடி - 1 டேபிள்ஸ்பூன்
- தயிர் - 250 கிராம்
- பட்டர் - 100 கிராம்
- உப்பு+எண்ணெய் = தேவைக்கு
- தேங்காய் - 1/2 மூடி
- இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
- இஞ்சி - 1 துண்டு
- எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
- பட்டை - 1 துண்டு
- கிராம்பு - 4
- ஏலக்காய் - 3
- பிரிஞ்சி இலை - 4
செய்முறை :
- சிக்கனை சுத்தம் செய்து பாதி தயிர், பிரியாணிமசாலாபொடி, கொஞ்சம் உப்பு சேர்த்து கலந்து ஊறவிடவும்.
- (வெங்காயம், தக்காளி) நீளவாக்கில் அரியவும்.பச்சை மிளகாயை கீறவும்.
- (புதினா, கொத்தமல்லி) சுத்தம் செய்து வைக்கவும்.
- அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- தேங்காயை துருவி அதனுடன் 1 துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து 3 கப் அளவில் பால் எடுக்கவும்.
- குக்கரில் பட்டர் அல்லது எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களை(கிராம்பு - 4, ஏலக்காய் - 3, பிரிஞ்சி இலை - 4)போட்டு தாளிக்கவும்.
- பின் வெங்காயம், இஞ்சி, பூண்டுவிழுது, தக்காளி, பச்சைமிளகாய், புதினா, கொத்தமல்லி என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
- வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஊறவிட்டசிக்கன் இவைகளைப் போட்டு வதக்கவும்.
- 1 கப் அரிசிக்கு =1 1/2 கப் தண்ணீர் அளவு, ஆக மொத்தம் 6 கப் தண்ணீர் அளவு.
- சிக்கன் பாதி வதங்கியதும் 3 கப் தேங்காய்ப்பால்+3 கப் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறு + அரிசி(தண்ணீயை வடிக்கட்டவும்) + உப்பு சரி பார்த்து சேர்க்கவும்.
- குக்கரை மூடி,ஆவி வந்ததும் வெயிட் போட்டு 10 நிமிடம் அல்லது 3 விசில் வந்ததும் அடுப்பை அனைக்கவும்.
- ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறி பரிமாறவும்.
சிக்கன் வேகும் போது நீர் விடும் , அதனால் அரிசிக்கு தண்ணீர் வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.
அரிசி போட்டு வேக வைக்கும் போது ஒரு விசிலுக்கு மேல் விடக்கூடாது அதே போல் நெருப்பும் குறைந்த அளவில் இருக்க வேண்டும் , இல்லா விட்டால் சாதம் குழைந்து விடும்.
0 கருத்துகள்:
Post a Comment