RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

ரசகுல்லா

தேவையான பொருட்கள்

  • பால் - 5 லிட்டர்

  • வினிகர் - 100 மில்லி

  • சோள மாவு (corn flour) - 25 கிராம்

  • சீனி - 6 கிலோ

  • தண்ணீர் - இரண்டரை லிட்டர்

செய்முறை

1. முதலில் பாலை நன்கு கொதி வரும் வரை காய்ச்சவும். காய்ச்சிய பாலை இறக்கி வைத்து, 100 மில்லி வினிகரை 100 மில்லி தண்ணீரில் கரைத்து பாலில் ஊற்றவும். வினிகரை அப்படியே ஊற்றினால், அதிக புளிப்பு தன்மை காரணமாக பால் திரிந்து சற்று கெட்டியாக கிடைக்கும். பனீர் தயாரிப்பதற்கு வினிகரை அப்படியே ஊற்றலாம்

2.வினிகரை தண்ணீரில் கரைத்து ஊற்றினால்தான் ரசகுல்லாவிற்கு ஏற்றார்போல் சற்று மிருதுவாக கிடைக்கும். இப்போது பால் திரிந்து பஞ்சு பஞ்சாக திரண்டு வரும். சிறிது தண்ணீரையும் அதில் ஊற்றி ஒரு கரண்டியால் லேசாக கிளறிவிடவும். பால் திரிந்து தனியாகவும், தண்ணீர் தனியாகவும் இருப்பதை நாம் பார்க்கலாம்

3.தண்ணீரை தனியாக எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். அடுத்தடுத்த முறைக்கு பாலை திரியச் செய்ய வினிகருக்கு பதில் இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். கடைகளில் இந்த புளித்த நீரைத்தான் பயன்படுத்துகின்றனர். திரிந்த பாலை ஒரு மெல்லிய துணியில் கொட்டி வடிகட்டிக் கொள்ளவும். நீர் முழுவதும் வடிவதற்காக அதனை அப்படியே கட்டி தொங்கவிடவும்.

4.சுமார் ஒரு மணி நேரம் சென்றபின் அந்த துணியை அவிழ்த்து பார்த்தால், திரிந்த பால் நீர் வற்றி சற்று கெட்டியாக காணப்படும். அதனை மேலும் சற்று கெட்டியாக்க அத்துடன் சோளமாவை சேர்த்து பிசையவும். இதனை நன்றாகப் பிசைந்து சற்று மிருதுவாக்கிக் கொள்ளவும்.

5.அத்துடன் நான் விரும்பிய வண்ணத்தினை சேர்த்து பிசைந்து கொள்ளலாம். நல்லத் தரமான வண்ணத்தை சேர்க்கவும். சுவை, மணத்திற்கு விரும்பினால் சில துளிகள் எசன்ஸ் சேர்க்கலாம். பிசையும் போது, அழுத்தி கெட்டியாக பிசைந்து விடக் கூடாது.

6.பிசைந்து வைத்துள்ளதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். விரும்பிய வடிவத்தில் உருட்டிக்கொள்ளலாம்.

7.அடுத்து பாகு காய்ச்ச வேண்டும். 6 கிலோ சீனிக்கு இரண்டரை லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். பாகு கொதித்து வரும் போது அதில் கால் லிட்டர் பால் ஊற்றவும். தீயை குறைத்து வைக்கவும். இப்போது அழுக்கு அனைத்தும் திரண்டு மேலே மிதக்க ஆரம்பிக்கும். அவற்றை கரண்டி அல்லது சாரணியால் அரித்து எடுத்து விடவும்.

8.தெளிவான பாகில் மூன்றில் ஒரு பங்கினை ரசகுல்லா ஊறவைப்பதற்கு தனியாக எடுத்து விடவும். பிறகு திரிந்த பாலில் இருந்து பிரித்து எடுத்த புளித்த தண்ணீரில் இரண்டு மேசைக்கரண்டி எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி மைதாவை கரைத்து பாகில் சிறிது தெளிக்கவும். இப்போது பாகு நன்கு நுரைத்து, பொங்கி வரும். அப்படி வரவில்லையெனில் மேலும் சிறிது கரைசலை தெளிக்கவும்.

9.நுரைத்து வரும் பாகில் உருட்டி வைத்துள்ள ரசகுல்லாக்களை போட்டு வேகவிடவும்.ரசகுல்லாக்கள் அனைத்தும் பாகில் நன்கு வேகவேண்டும். அளவில் பெரியதாகவும், மிருதுவாகவும் மாறும் வரை சாரணியால் அவ்வபோது கிளறிவிட்டு வேகவிடவும்.

10.பின்னர் அடுப்பில் இருந்து பாத்திரத்துடன் அப்படியே இறக்கி, பாகை அள்ளி அள்ளி ரசகுல்லாக்களின் மேல் விட்டு சற்று ஆறவிடவும். இப்படி செய்வதன் மூலம் ரசகுல்லா இன்னும் மிருதுவாக மாறும்.

11.அதன் பின்னர் ரசகுல்லாக்களை எடுத்து, முன்பு தனியே எடுத்து வைத்துள்ள பாகில் போட்டு ஊறவிடவும்.




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பால் பாயசம்


கேரள இனிப்பு வகை உணவான பால் பாயசம் செய்வது எப்படி என்பதை இந்த வீடியோ காட்சி காட்டுகிறது.

அரிசி, பால், சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பாயசம் ஆகும். இது வழக்கமாக விருந்துகளிலும், சிறப்பு கொண்டாட்டங்களின் போதும் பரிமாறப்படும்.

பால் பாயசம் பார்ப்பதற்கு நன்றாக மணமுடையதாகவும் மிகுந்த சுவையுள்ளதாகவும் இருக்கும்!

தேவையான பொருட்கள்
  • உமி நீக்கப்பட்ட அரிசி - ¼ கப்
  • பால் - 1½ லிட்டர்
  • சர்க்கரை - ¾ கிலோ

அழகுப்படுத்துவதற்காக
  • முந்திரி பருப்பு - ¼ கப்
  • உலர்ந்த திராட்சை - ¼ கப்
  • ஏலம் – 4
  • நெய் (பொரிப்பதற்காக)
செய்முறை
மிகவும் சுவையான இந்த உணவு, தயாரிப்பதற்கு மிகவும் எளிது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தேவையான பொருட்களை எல்லாம் ஒரு பிரஷர் குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை அதிக எரிதழலில் சமைக்க வேண்டும்.

இப்போது அடுப்பை குறைத்து ½ மணி நேரம் வேக வைக்க வேண்டும். பின்னர் பொடித்து வைத்தவற்றை சேர்க்க வேண்டும்.

அவ்வளவுதான்! நீங்கள் அடுப்பை அணைத்து விட்டு அப்படியே பரிமாறலாம்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மங்குஸ்தான்


பழங்களின் அரசி என்று பெருமையுடன் அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் மலைப் பகுதிகளில் விளையக் கூடியவை. தென்னிந்தியாவில் மலைப் பகுதியில் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது. இது மலேசியா, மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகம் விளைகிறது. தென் அமெரிக்க நாடுகள், பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.
இதற்கு சூலம்புளி என்ற பெயரும் உண்டு இதை தென்கிழக்கு ஆசியநாடுகளில் பழங்காலத்தில் தோல், பற்களின் ஈறு நோய்களுக்கும், பல்வலி, தொற்நோய் கிருமிகளையும் (Infection), காளான்களையும் (Fungus) அழிக்க பயன்படுத்தினர்.

மங்குஸ்தான் பழத்தின் தோல் பகுதி தடிமனாக காணப்படும். பழத்தின் தோல் பகுதியை உடைத்தால் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் மூன்று அல்லது நான்கு சுளைகள் இருக்கும்.

மன அழுத்தம் போக்கும்



நாட்பட்ட புண்கள், காயங்கள், காய்சல், இரத்தம் கலந்த வயிற்று போக்கு, உடல் மற்றும் மன சோர்வு, மன அழுத்தம், கவலை போன்றவைகளை குணமாக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.

வீக்கம் குறைக்கவும், புற்று நோய் எதிர்ப்பு சக்தி, வயதாவதை நிதானப்படுத்தவும், தோல்களின் சுருக்கத்தை குறைக்கவும், பாக்டீரியா & வைரஸுக்கு எதிர்ப்பாகவும் பயன்படுகிறது.

உடல் சூட்டைத் தணித்து தேகத்தை சமநிலையில் வைத்திருக்கும். வயிற்றுவலியைக் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.சீதபேதி இரத்தக் கழிச்சல் உள்ளவர்களுக்கு மங்குஸ்தான் பழத்தின் மேல் தோலை சுட்டு அல்லது பச்சையாக அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி உடனே குணமாகும்.

வாய் துர்நாற்றம் நீங்க



மங்குஸ்தான் பழத்தை நன்கு சுவைத்து சாப்பிட்டு, அல்லது அதன் தோலை காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். வயிற்றுப் புண், வாய்ப் புண் குணமடையும். கிருமிகளைக் கொள்ளும்.



கண் எரிச்சலைப் போக்க

கனிணியில் வேலை செய்பவர்களுக்கு பொதுவாக கண்கள் வறட்சி அடைந்து கண் எரிச்சலை உண்டாக்கும்.

இதனால் சிலர் தலைவலி, கழுத்து வலி என அவதிக்குள்ளாவார்கள். இவர்கள் மங்குஸ்தான் பழம் சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் நீங்கி, கண் நரம்புகள் புத்துணர்வு பெறும்.

சிறுநீர் நன்கு வெளியேற மங்குஸ்தான் பழம் சிறந்த மருந்தாகும்.அதுமட்டுமல்லாமல் இருமலை தடுக்கும், சூதக வலியை குணமாக்கும், தலைவலியை போக்கும்,நாவறட்சியை தணிக்கும்.

பெண்களுக்கு

மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது. மங்குஸ்தான் பழத்தை சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

சீசன் காலங்களில் மங்குஸ்தான் பழத்தை வாங்கி சாப்பிடுவது நல்லது. அல்லது மங்குஸ்தான் பழத்தின் தோலை காய வைத்து பொடிசெய்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அதிக இரத்தப் போக்கு குறையும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் உலகம் Headline

விருந்தினர் இணைப்புநிலை :
Your Ad Here
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான சமர்பிப்புகள்.

பின்பற்றுவோர்

◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►