RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

மேத்தி சிக்கன்

தேவையான பொருட்கள்:

  1. சிக்கன் - 1/2 கிலோ
  2. வெந்தயக்கீரை - 1/2 கப் 
  3. அரிந்த வெங்காயம் - 1 
  4. தயிர் - 1/4 கப் 
  5. மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன் 
  6. வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன் 
  7. தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன் 
  8. சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன் 
  9. கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் 
  10. உப்பு - தேவையான அளவு
  11. எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
  • பச்சை மிளகாய் -
  • தக்காளி -
  • இஞ்சி பூண்டு விழுது - 1டேபிள்ஸ்பூன்


செய்முறை : 

  • வெங்காயத்தை எண்ணெயில் பிரவுன் கலரில் பொரித்து ஆறவைத்து தயிருடன் விழுதாக அரைக்கவும். 
  • வெந்தயக்கீரையை உப்பு+சர்க்கரை கலந்த நீரில் 15 நிமிடம் வைத்து நன்கு அலசி வைக்கவும். 
  • வெந்தயக்கீரையை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு மொறுமொறுப்பாக பொரித்து தனியாக வைக்கவும். 
  • அதே கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.பின் சீரகப்பொடி+எல்லா தூள் வகைகள் சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும். 
  • பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி மூடி போட்டு வேகவிடவும். 
  • வெந்த பின் பொரித்த வெந்தயக்கீரை+கரம் மசாலா, தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து நன்கு கிரேவி பதத்திற்க்கு வரும் போது இறக்கவும்.




சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்







  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

Post a Comment

தமிழ் உலகம் Headline

விருந்தினர் இணைப்புநிலை :
Your Ad Here
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான சமர்பிப்புகள்.

பின்பற்றுவோர்

◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►