தேவையான பொருள்கள் :
- நெய் சேர்த்து வறுத்த ரவை : ஒரு கப்
- சர்க்கரை : அரை கப்
- தேங்காய் துருவல் : அரை கப்
- ஏலக்காய் பொடி செய்தது : கால் ஸ்பூன்
- நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி: 5 முதல் 10
- சூடான பசும்பால் : அரை கப்
செய்முறை :
இந்த வகை லட்டு செய்வது மிகவும் எளிது. மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும்(பாலைத் தவிர) ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் கொஞ்சம் கொஞ்சமாக பாலை விட்டு சேர்த்துக் கலக்கவும். உருண்டை பிடிக்கும் அளவுக்கு கலவை ஈரமானால் போதும். இல்லையென்றால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலம். இதனை லட்டு போல் உருண்டையாக பிடிக்கவும்.
மிக எளிதாகவும், வேகமாகவும் இந்த இனிப்பை செய்து தர முடியும். விடுமுறையில், பண்டிகையில் இருக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக செய்து கொடுக்க ஏற்றது இந்த லட்டு.
0 கருத்துகள்:
Post a Comment