RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

அல்வா

தேவையான பொருள்கள் :
  1. பயத்தம் பருப்பு – 100 கிராம்
  2. ஏலக்காய் – 5
  3. சர்க்கரை – 400 கிராம் 
  4. கிஸ்மிஸ் – 10 கிராம்
  5. நெய் – 100 கிராம் 
  6. முந்திரிப் பருப்பு – 10
  7.  சம்பா கோதுமை மாவு – 100 கிராம்
  8. சர்க்கரை இல்லாத கோவா – 100 கிராம்
செய்முறை :

  • பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்.
  • பால் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவிடவும்.
  • குக்கர் திறக்கவந்ததும் சூட்டுடனே வெளியே எடுத்துநன்கு மசித்துக்கொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் சர்க்கரை, மசித்த பயத்தம்பருப்பு கலந்து கிளறத் தொடங்கவும்.
  • முதலில் சர்க்கரையால் நெகிழ்ந்து, பின் கலவை இறுக ஆரம்பிக்கும்.
  • சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்து விடாமல் கிளறவும்.
  • நன்கு சேர்ந்து ஒட்டாமல் வரும்போது இறக்கவும்.
  • இறக்குவதற்கு சற்றுமுன் கலர் (நான் சேர்க்கவில்லை.), ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், உடைத்த அல்லது நொறுக்கிய கொட்டைப் பருப்புகள் சேர்க்கவேண்டும்.

பல தளங்களில் கோதுமை மாவு ஒரு பங்கு சேர்ப்பதாக இருக்கிறது. இது எனக்குச் செய்தி. ஒருவேளை இப்பொழுது திருமணம் மாதிரி பெரிய விசேஷங்களிலும் செய்வதால் அளவிற்காக கோதுமை மாவு சேர்க்கிறார்களா என்று தெரியவில்லை. எதற்கும் சேர்க்காமல் ஒருமுறை செய்துபார்த்து அதன் சுவையை  என்ன என்று கூறுங்கள்.

     
     


    • Digg
    • Del.icio.us
    • StumbleUpon
    • Reddit
    • RSS

    0 கருத்துகள்:

    Post a Comment

    தமிழ் உலகம் Headline

    விருந்தினர் இணைப்புநிலை :
    Your Ad Here
    Related Posts Plugin for WordPress, Blogger...

    பிரபலமான சமர்பிப்புகள்.

    பின்பற்றுவோர்

    ◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►