RSS


உணவு தயாரிப்பதற்கான செய்முறை

உங்கள் அன்புக்கு நன்றி

இந்த நாள் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்.

தோசை

 தேவையான பொருள்கள் :
  1. புழுங்கல் அரிசி – 1 1/2 கப்
  2. பச்சரிசி – 1 1/2 கப் 
  3. வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன் 
  4. உப்பு – தேவையான அளவு
  5. எண்ணை – தேவையான அளவு 
  6. முழு உளுத்தம் பருப்பு – 1 கப் (தோல் நீக்கியது)
 செய்முறை :


  • அரிசிகள், வெந்தயம், பருப்பை ஒன்றாக 4 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • கிரைண்டரில் அவ்வப்போது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். மிக மிக மென்மையாக, மாவில் கொப்புளங்கள் வரும்வரை அரைக்க வேண்டும்.
  • அரவை முடிக்கும்போது உப்பு சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கிரைண்டரை ஓடவிடவும்.
  • மாவை கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • இந்த மாவில் அடுத்த அரைமணி நேரத்தில் தோசை செய்யலாம். அல்லது ஒரு 6,7 மணி நேரங்கள் வெளியே வைத்து, மாவைப் பொங்கவைத்தும் செய்யலாம்.
  • தோசைக் கல்லை சூடாக்கி, மாவை நடுவில் விட்டு, சுற்றி மெல்லிய வட்டமாகப் பரத்த வேண்டும். அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
  • சுற்றிலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, சிவந்ததும் திருப்பிப் போட வேண்டும். சுலபமாகத் திருப்ப முடியும்.
  • அடுத்தப் பக்கம் அதிக நேரம் வேகத் தேவை இல்லை. இதற்கு, கல்தோசை என்று பெயர். கொஞ்சம் மொறுமொறுப்பாக வரும்.  


    • மொறுமொறுப்பில்லாமல் கொஞ்சம் சாஃப்டான தோசை தேவை என்றால் பச்சரிசியைஅதிகரித்து புழுங்கலரிசியைக் குறைத்தோ (2:1) அல்லது முற்றிலும் பச்சரிசிமட்டுமே உபயோகித்தோ செய்யலாம். இதற்கு மெதுதோசை என்று பெயர். பச்சரிசி தோசைஸ்பான்ச் மாதிரி இருக்கும்.
    • தோசைக்கான அந்தச் சிவந்த நிறத்தை, வெந்தயம் தருகிறது.

     

    • Digg
    • Del.icio.us
    • StumbleUpon
    • Reddit
    • RSS

    0 கருத்துகள்:

    Post a Comment

    தமிழ் உலகம் Headline

    விருந்தினர் இணைப்புநிலை :
    Your Ad Here
    Related Posts Plugin for WordPress, Blogger...

    பிரபலமான சமர்பிப்புகள்.

    பின்பற்றுவோர்

    ◄◄◄ உங்கள் அன்புக்கு நன்றி மீண்டும் வருக ►►►